2011ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்று வெடித்து சிதறியதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை நடத்திய நபர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
கல்வியறிவு பண்பைத் தரும் என்பார்கள். அதிலும் புனிதமான தொழில் என்று போற்றப் படும் டாக்டர்களே பயங்கரவாதிகளாக இருப்பது பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த இரண்டு டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நடத்திய சோதனையில் 350 கிலோ வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
இவர்களில் கைது செய்யப்பட்ட டாக்டர் அகமது மொஹியுதீன் சையத் என்பவரிடம் ரிசின் என்ற நச்சுப் பொருளைப் பிரித்தெடுக்கும் ஆமணக்கு எண்ணெய் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப் பட்டன. உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்ட டாக்டர் அடில் ரத்தோரின் லாக்கரில் வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப் பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் முஜாமில் சஹில் கைது செய்யப்பட்டார்.
சஹிலிடம் நடத்திய விசாரணையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 2900 கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து பதேபூரில் உள்ள இஸ்லாமிய இமாம் ஒருவர் வீட்டிலும் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, டாக்டர் ஷகீன் என்ற பெண் டாக்டரிடமிருந்து AK 47 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. டாக்டர்களைத் தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது ஒன்றும் ஜெய்ஷ் இ முகமது போன்ற இஸ்லாமிய பயங்கரவாதஅமைப்புகளுக்குப் புதியதல்லல. 2014ம்ஆண்டுப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வந்தவுடன், பயங்கரவாதத்துக்குஎதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன.
அதன்பிறகு நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரமாக்கப்பட்டது. அதன்பிறகே இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள்,டாக்டர்களைப் பயங்கரவாதத்துக்குப் பயன்படுத்தத் தொடங்கியது. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான ஐஎஸ்ஐஎஸ் உடன் வைத்திருந்த தொடர்புகளுக்காகப் பெங்களூரில் ஒரு கண் மருத்துவர் அப்துர் ரஹ்மான் கைது செய்யப்பட்டார்.அதே காரணங்களுக்காக 2023ம் ஆண்டு ஜூலை மாதம், புனேவைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் அட்னான் அலி கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் ராஞ்சியில் உள்ள ஒரு மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறையில் பணிபுரிந்த இஷ்தியாக் அகமது, அல்-கொய்தாவுடன் தொடர்பு வைத்திருந்தகுற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் கைதான டாக்டர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பயங்கரவாத அமைப்புகளின் தலைமையில் இருந்து அடுத்த உத்தரவு வரும் வரை காத்திருக்கும் படி கூறப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான சதி திட்டங்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டு ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் மூலம் காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது என்று கூறப்படுகிறது. சமூகத்தில் பெரிய அந்தஸ்துடன் வாழும் அதிக கல்வியறிவு பெற்றவர்களை மதத்தின் பெயரில் மூளைச்சலவை செய்து பயங்கரவாததிட்டங்களுக்குப் பயன்படுத்தும்போது அவர்கள்பற்றிச் சந்தேகம் வருவதில்லை என்பதால் அதிக கல்வியறிவு பெற்றவர்களை தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்துவது தற்போது அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் MI5 பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் 39,000 முஸ்லிம்கள் இருப்பதாகவும், அதில் 13,000 முஸ்லிம் டாக்டர்கள் இருப்பதாகவும், முஸ்லிம் டாக்டர் ஒருவர் பயங்கரவாதியாக இருப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் என்றும் கூறப் படுகிறது. சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் எம்பிபிஎஸ் படித்த டாக்டர்கள். இவர்கள் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பயங்கரவாதத்துக்கு கல்வியுடன் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் பயங்கரவாதத்துக்கு மதத்துடன் தொடர்புண்டு. எனவே தான் குறிப்பிட்ட மதத்தில் டாக்டர்களும் பயங்கரவாதிகளாக உள்ளனர் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
















