ஆட்சியில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை என்றும், தனது மகனை முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் ஆட்சி நடத்தி வருவதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், 6 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டபோதும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்றும், ஒரு நெல் மூட்டைக்கு ரூ.40 கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
துணை முதல்வருக்கும், உணவுத்துறை அமைச்சருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாகவும் அவர் கூறினார்.
சார் என்றால் திமுக-வுக்கு பயம்; திமுக ஆட்சியில் தொடர் பாலியல் வன்கொடுமை நடைபெற்று வருவதாகவும் அவர் சாடினார்.
தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு காரணம் போதை பொருகள் தான் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
















