ஒவ்வொரு மாநில நிதியமைச்சர்களின் பங்களிப்பின்றி ஜி.எஸ்.டி வரிக் குறைப்பு சாத்தியமில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற அவர், ஜி.எஸ்.டி பாராட்டு விழா பிரதமருக்கானது என தெரிவித்தார்.
கொரோனா காலகட்டத்தில் கூட எந்த வரியையும் உயர்த்த பிரதமர் மோடி அனுமதிக்கவில்லை என்றும், வியாபாரிகளை குடும்ப உறுப்பினர் போல நினைத்து பேசக்கூடியவர் பிரதமர் மோடி என தெரிவித்தார்.
வருமான வரி உச்சவரம்பு பிரதமரின் ஆணைக்கிணங்க மாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். மாநில நிதியமைச்சர்களின் பங்களிப்பின்றி ஜி.எஸ்.டி குறைப்பு சாத்தியமில்லை என்றும்., ஜி.எஸ்.டி 2.0-க்கு பின் இதுவரை 67.7 பில்லியன் டாலர் வர்த்தகம் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வியாபாரிகளின் கோரிக்கைகள் பிரதமரிடம் கொண்டு செல்லப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
















