தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரியில் விலக்கு அளித்தால் மட்டுமே மீண்டும் பேருந்துகளை இயக்குவோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளுக்கு கூடுதல் வரி மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து, போக்குவரத்து துறை ஆணையர் கஜலட்சுமி தலைமையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன ஆலோசனை நடைபெற்றது.
இதில் சுமூக முடிவு எட்டப்படாததால், ஆம்னி பேருந்துகளுக்கு தமிழகத்தில் சாலை வரி விலக்கு அளித்தால் மட்டுமே பேருந்துகளை இயக்குவோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும், 4 மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது எனவும் கூறினர்.
















