ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சி தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் பங்கேற்காததால் வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.
கொடுமுடி பேரூராட்சி தலைவி திலகவதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் திலகவதி இடைக்கால தடை பெற்றார்.
இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆர்.டி.ஓ. சிந்துஜா முன்னிலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.
















