மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது.
மகாராஷ்டிராவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கோலாப்பூரில் நகரில் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்போது வீட்டின் பின்பகுதியில் புகுந்த சிறுத்தையைப் பிடிக்க முயன்றபோது சிறுத்தை தாக்கியதில் 4 போலீசார் காயமடைந்தனர்.
இதையடுத்த ஹோட்டல் ஒன்றின் பின்பகுதியில் சிறுத்தை பதுங்கியிருந்ததை வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்டறிந்தனர்.
இதையடுத்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் வலையை விரித்துப் பதுங்கி இருந்த சிறுத்தையை பிடித்தனர். இதனால் அப்பகுதியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
















