இந்தியா – பூடான் இணைந்து அமைத்த புனாட்சங்சு-II நீர்மின் திட்டத்தைப் பூடான் மன்னருடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பூடான் நாட்டிற்கு பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். தலைவர் திம்பு சென்றடைந்த பிரதமருக்கு அந்நாட்டு பிரதமர் ஷெரிங் டோப்கே உற்சாக வரவேற்பு அளித்தார்.
இதைத்தொடர்ந்து பூடான் மன்னர் ட்ருக் கியால்போவை சந்தித்த பிரதமர் மோடி, உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து இந்தியா – பூடான் இணைந்து அமைத்த புனாட்சங்சு-II நீர்மின் திட்டத்தை மன்னர் ட்ருக் கியால்போவுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புனித புத்தர் சிலைகளின் முன்னிலையில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
















