அமெரிக்க அரசுத்துறைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அந்த முடக்கத்தை நீக்குவதற்கான மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட்டது.
செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்ற அனுமதி இல்லாததால் அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாகத் தங்களது கட்சி நிலைப்பாட்டை மீறி, அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் சமரசம் செய்துகொள்ள சில ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் முன்வந்தனர். இதனையடுத்து இந்த மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
















