தீபாவளி பண்டிகையின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உமர் முகமது நபியின் நண்பர் முசம்மை காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வெளியாகி உள்ளது.
அதில் தீபாவளி பண்டிகையின் போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியதாகயும், ஆனால் அம்முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டதாகவும். இதற்காக ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள் பலரும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
















