பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளதால் பாஜகவினர் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றனர்.
பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 122 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 68.52 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதனால் பீகார் சட்டசபை தேர்தலில் சராசரியாக 66.80 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. 122 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 130 முதல் 160 தொகுதிகளை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றனர்.
பாட்னாவில் பாஜகவினர் வெற்றியைக் கொண்டாட 501 கிலோ அளவில் லட்டுகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
















