ஹரியானா மாநிலத்தில் காரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஜஜ்ஜார் மாவட்டம் ஜல்பிக் பகுதியில் போலீசார் வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் கட்டுக்கட்டாக 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு அவர்கள் அதிர்சசி அடைந்தனர்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை கொண்டுவந்ததால் அதனைப் பறிமுதல் செய்த போலீசார், வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
















