அமெரிக்க கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைப்பது உயர்கல்வித்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி உதவி வழங்குவதில் வெளிநாட்டு மாணவர்களின் பங்கு முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைப்பது பரவலான கல்லூரி மூடல்களுக்கும், பொருளாதார இழப்புக்கும் வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும், வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்காவில் படிக்க அனுமதிப்பதன் மூலம், உயர்கல்வித்துறையை நிதி ரீதியாக வலுவாக வைத்திருக்க முடியும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
















