ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 5 புள்ளி 20 சதவீதமாகக் குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நிலவரப்படி நாட்டில் மொத்தம் 56 கோடியே 20 லட்சம் பேர் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் அதிகரித்துள்ளதாகவும் அங்கு வேலையின்மை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நகர்ப்புறங்களில் வேலையின்மை சற்று அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
















