சிரியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் ரோமன் கால சிலைகள் திருடப்பட்டுள்ளன.
மார்ச் 2011-ல் மோதல் தொடங்கிய பிறகு, அதிகாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற கலைப்பொருட்களை டமாஸ்கஸுக்கு கொண்டு வந்தனர்.
அவற்றைத் தலைநகர் டமாஸ்கசில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைத்தனர். இந்தச் சூழலில், பல்வேறு சிலைகள் திருடுபோயுள்ளதாக அருங்காட்சியகங்களுக்கான இயக்குநரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
















