ஆப்ரேஷன் சிந்தூரில் மேற்கொள்ளப்பட்ட யுக்திகளை மீண்டும் பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், பாதுகாப்புத்துறையை மேம்படுத்த உள்நாட்டு தற்சார்பை அதிகரிக்கும் நடைமுறை வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், டிசம்பர் மாதத்திற்குள் அனைத்தையும் இறுதி செய்துவிடுவோம் எனவும் கூறியுள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூரில் மிகவும் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தோம் என்றும், ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 அல்லது வேறு எந்தப் போராக இருந்தாலும், இந்த திட்டங்களை சிறப்பாகப் பயன்படுத்த தயாராக உள்ளதாகவும் உபேந்திரா திவேதி தெரிவித்தார்.
















