இரண்டு நாள் பயணமாகப் பூடான் சென்ற பிரதமர் மோடி திம்புவில் உள்ள காலசக்கர அபிஷேகம் நிகழ்வில் அந்நாட்டு மன்னருடன் இணைந்து பங்கேற்றார்.
விழாவின் ஒரு பகுதியாக மன்னர் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார். இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பூடான் மன்னருடன் காலசக்கர அபிஷேகம் நிகழ்வில் பங்கேற்கும் பெருமையைப் பெற்றதாகவும், உலகெங்கிலும் உள்ள பவுத்த மதத்தினருக்கு இது ஒரு முக்கியமான சடங்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைதொடர்ந்து பூடான் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு நாடு திரும்பியபோது பிரதமர் மோடியை விமான நிலையம்வரை வந்து மன்னர் மற்றும் பிரதமர் வழியனுப்பி வைத்தனர்.
















