அமெரிக்கர்களிடையே போதுமான திறமை இல்லை என, H1B விசா தொடர்பான தனது நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மாற்றியுள்ளார்.
அதிபர் டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினரை கட்டுப்படுத்தும் நோக்கில், H1-B விசாவுக்கு 1 லட்சம் டாலர் விண்ணப்பக் கட்டணம் விதிப்பதாக உத்தரவைப் பிறப்பித்தது.
இது, அமெரிக்காவுக்கு வெளியே இருந்து வரும் திறமையான வெளிநாட்டினருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியின் நேர்காணலிலில் பேசிய ட்ரம்ப், உண்மையில் அமெரிக்காவில் போதுமான திறமையானவர்கள் இல்லை என்றும் வேலையில்லாதவர்களை நேரடியாக ஏவுகனைகளை தயாரிக்கும் குழுவில் வைத்துவிட முடியாது என்றும் உதாரணத்துடன் கூறினார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களை அமெரிக்கா ஈர்ப்பது மிக அவசியம் எனவும் தெரிவித்தார்.
















