10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி 234 தொகுதிகளிலும் டிசம்பர் 17ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
சென்னை, ECR அக்கரையில் அன்புமணி தரப்பு பாமகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அன்புமணி ராமதாஸ், பாமக வலுவாக உள்ள 100 தொகுதிகளுக்குக் கட்சிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இனி ஒவ்வொரு மாதமும் மாநில பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களைத் தான் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், திமுகவை விட நல்ல கொள்கைகளும், அதிக இளைஞர்களும் பாமகவில் உள்ளதாகக் கூறிய அவர், திமுகவுக்கும் பாமகவுக்கும் உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டி, தொண்டர்கள் செயல்பட வேண்டிய விதத்தை வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், கட்சி நிர்வாகிகள், SIR குறித்து தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், டிசம்பர் 4ம் தேதி உத்தேச வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்ட பிறகு மக்களைச் சந்திக்கத் தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
















