திமுக ஆட்சியின் முடிவுக்கு கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பேசிய அவர், கோவை பாலியல் வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
தமிழகத்தில் போதைக் கலச்சாரம் அதிகரித்து விட்டதாகவும் அவர் கூறினார். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதே முக்கியம் என்றும், அதிமுக-பாஜக கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணி என்றும் அவர் கூறினார்.
















