பள்ளிக்கரணை சதுப்பு நிலம் எனக்கூறப்படும் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான இடைக்காலத் தடையை டிசம்பர் 2ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சதுப்பு நிலத்தின் எல்லையை துல்லியமாக தீர்மானிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறினார்.
இதனை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, இடைக்கால தடை உத்தரவை டிசம்பர் 2ம் தேதி வரை நீட்டித்து, விசாரணையை அன்றைய தினத்துக்கு தேதிக்கு ஒத்திவைத்தனர்.
















