புதுச்சேரியில் ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் ATM இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ள அரசுப் பள்ளி மாணவிகள், அதன் செயல்முறையைத் தத்ரூபமாகச் செய்து காண்பித்தனர்.
நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் இயந்திரங்கள் ஸ்கிம்மிங் மற்றும் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்த ஏடிஎம் இயந்திரத்தைப் படிக்காத பாமர மக்கள் பணம் வரவு வைப்பது மற்றும் எடுப்பது போன்ற செயல்களுக்கு மிகவும் சிரமப்பட்டு மற்றொருவர் உதவியை நாடி வரும் சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில் விக்சித் பாரத் 2025 என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் புதுச்சேரி சோரப்பட்டு அரசு பள்ளியில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பாமர மக்களும் பயன்படுத்தும் வகையில் மாதிரி ஏடிஎம் இயந்திரத்தை அரசுப் பள்ளி மாணவிகள் உருவாக்கி உள்ளனர்.
மேம்பட்ட ஏடிஎம் அமைப்பு, அதிநவீன பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை ரோபோடிக் குரல் தொடர்புடன் இணைத்து, பாதுகாப்பான, வசதியான மற்றும் திறமையான பரிவர்த்தனை அனுபவத்தை வழங்குவதை மாணவிகள் தத்ரூபமாகச் செய்து காண்பித்தனர்.
















