இந்தியாவுடனான உறவை வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் பாழ்படுத்தி வருகிறாா் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவரளித்த பேட்டியில், கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது அரசால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது வருத்தத்துக்குரியது எனக் கூறியுள்ளார்.
தான் வங்கதேசம் திரும்ப வேண்டும் என்றால், அவாமி லீக் கட்சி மீது விதிக்கப்பட்ட தடையை வங்கதேச இடைக்கால அரசு நீக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
















