புதுச்சேரியில் மதுபோதையில் காலணி கடை உரிமையாளரிடம் இளைஞர் தகராறில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி வீதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது வீட்டின் கீழே காலணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் நிலையில், பகல் நேரத்தில் அவரது மனைவி கவிதா பணிப்பெண்ணுடன் வியாபாரம் பார்த்துள்ளார்.
அப்போது, அங்கு மதுபோதையில் வந்த இளைஞர், காலணியை இலவசமாக வழங்கக் கோரி கவிதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், மிரட்டும் தொனியில் பேசியதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் கடையின் முன்பக்க கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளார்.
இதுகுறித்து கடையின் உள்ள சிசிடிவி காட்சிகளுடன் ராஜேந்திரன் புகார் மனு அளித்தார். இதனடிப்படையில், விழுப்புரத்தைச் சேர்ந்த சையத் முஸ்தபா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
















