ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
ஆற்காடு அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் மேம்பால பணிகள் காரணமாக வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
இதனால் ஆற்காடு அருகேயுள்ள சர்வீஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒருமணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
















