கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ வசம் ஒப்படைத்தது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பலருக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி, கடந்த நான்கு நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் இன்று கிரிராஜ், பரமேஸ்வரன், லோஷன் உள்ளிட்ட நான்கு பேரிடம் அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனால், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை விரைவில் வெளிவரும் எனப் பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
















