புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே, தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தனியார் பயிற்சி விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கித் தனியார் பயிற்சி விமானம் சென்று கொண்டிருந்தது.
விமானத்தை ராபர்ட் ஹாசிம் என்பவர் இயக்கிய நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.
உடனே, சுதாரித்துக் கொண்ட விமானி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே விமானத்தை பத்திரமாகத் தரையிறக்கினார்.
இதுகுறித்து தகவலறிந்த திருச்சி விமான நிலைய அதிகாரிகள், விமானம் தரையிறங்கிய பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
















