குருபகவானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள், வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகப்பெருமானையும், குருபகவானையும் வழிபட வியாழக்கிழமை உகந்த நாளாகப் பார்க்கப்படுவதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அதிகாலை முதலே கோயிலில் குவிந்த பக்தர்கள், கடலில் புனித நீராடினர். பின்னர், 3 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
















