நெல்லை அருகே தனியார் இடத்தில் தேங்கிய மழைநீரை தேசிய நெடுஞ்சாலையில் பாய்ச்சியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர்.
நெல்லை மானூரில் கடை அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில், சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கியது.
மழைநீரை கட்டுமான பணியாளர்கள் மின் மோட்டார்மூலம் நேரடியாகத் தேசிய நெடுஞ்சாலையில் வெளியேற்றியுள்ளனர்.
இந்தத் தண்ணீரானது நெடுஞ்சாலையில் தேங்கி நின்றதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
















