செவ்வாய் கிரகத்தில் நீண்ட நாட்கள் தண்ணீர் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தைப் போன்ற பண்புகளை உடைய அமீரக பாலைவனங்களில் அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வரும் கியூரியாசிட்டி ரோவரிலிருந்து பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி அந்தக் கிரகத்தில் உள்ள கேல் என்ற பள்ளத்தாக்குக்கும் அமீரக பாலைவன பகுதியின் நிலப்பரப்புக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், செவ்வாய் கிரகம் வெறுமனே ஈர நிலையிலிருந்து வறண்ட நிலைக்குச் செல்லவில்லை என்பதை தங்கள் கண்டுபிடிப்புகள் எடுத்துக் காட்டுவதாகவும், அதன் ஏரிகள், ஆறுகள் மறைந்த பிறகும் சிறிய அளவிலான நீர்நிலைகள் தொடர்ந்து நிலத்தடியில் இருந்திருப்பது தெரிய வந்துள்ளதாகவு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், அமீரக பாலைவனத்தின் குறிப்பிட்ட நிலப்பரப்பு, செவ்வாய் கிரக நிலப்பரப்புடன் ஒத்து இருப்பதால் நீர் நிரம்பிய பகுதிகளுடன் இதே போன்ற உயிர்கள் வாழ்வதற்கு தகுதியான இடமாகச் செவ்வாய் கிரகம் இருந்திருக்க வேண்டும் என்றும் நுண்ணுயிரிகள் அங்கு வாழ்ந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
















