ஆஸ்திரேலியா முழுவதும் வானத்தில் காணப்பட்ட கண்கவர் தென் துருவ ஒளியின் காட்சி இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சூரியனில் இருந்து வரும் ‘பிளாஸ்மா’ துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களுடன் மோதும்போது பச்சை, இளஞ்சிவப்பு, ஊதா மற்றும் சிவப்பு நிறங்களில் வானம் காட்சி அளிக்கும்.
இந்நிகழ்வு பூமியின் தென் துருவத்தில் ஏற்படும்போது அரோரா ஆஸ்ட்ராலிஸ் என்றும் வட துருவத்தில் ஏற்படும்போது அரோரா பொரியாலிஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தென்பட்ட இந்த அரிய நிகழ்வை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
இதனையடுத்து, CANNIBAL சூரியப் புயலால் இந்த நிகழ்வு நடைபெற்றதாகவும், இந்தகாட்சியைத் தவறவிட்டவர்களுக்கு, இன்றிரவு மற்றொரு வாய்ப்பு கிடைக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
















