அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிரியா அதிபரிடம் தங்களுக்கு எத்தனை மனைவிகள் எனக் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிரியா அதிபர் அகமது அல்-ஷரா, வெள்ளை மாளிகையில் அந்நாட்டின் அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார்.
அப்போது, சிரியா அதிபருக்கு வாசனை திரவியத்தை அதிபர் டிரம்ப் பரிசளித்தார். இதனையடுத்து, “இது ஆண்களுக்கான வாசனை திரவியம்” என்று டிரம்ப் சிரியா அதிபரிடம் கூறினார்.
மேலும் அவர் அந்த வாசனை திரவியத்தைச் சிரியா அதிபர் மீது தெளித்து, இது மிகச் சிறந்த வாசனை திரவியம் என்றும், மற்ற வாசனை திரவியங்கள் தங்கள் மனைவிக்கானது என்றும் தெரிவித்தார்.
பின்னர், தங்களுக்கு எத்தனை மனைவிகள்? என்று டிரம்ப் கேட்க, அவரும் ஒன்றே ஒன்று தான் எனப் பதிலளிக்க அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிக்கத் தொடங்கினர். இது குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
















