உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ரயில் தண்டவாளத்திற்கு இடையில் சோலார் பேனல்களை பொருத்தி மின் உற்பத்தி செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள ரயில் நிலையங்களை மின்சார உற்பத்தி நிலையங்களாக மாற்றும் திட்டத்தில் ரயில்வே துறை இறங்கி உள்ளது.
அதற்காக ரயில் தண்டவாளங்களில் எளிதில் அகற்றக்கூடிய வகையிலான சோலார் பேனல்களை அமைக்கும் புதிய முயற்சியில் ரயில்வே துறை வெற்றி கண்டுள்ளது.
அந்த வகையில், முதல் முறையாக, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள நமோ பாரத் ரயில்வே டிப்போவில் தண்டாவளத்திற்கு இடையே 70 மீட்டர் நீளத்திற்கு 28 சோலார் பேனல்கள் பொருத்தத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் ஆண்டுதோறும் 17ஆயிரத்து 500 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை NCRTC தொடங்கியுள்ளது.
















