ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் S.I.R பணிகளில் முறைகேடு செய்த திமுகவினரிடம் வட்டாட்சியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நாரை குல மேடு பகுதியில் S.I.R. படிவங்களை விதிகளை மீறித் திமுகவினர் பூர்த்தி செய்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து அங்குச் சென்ற வட்டாட்சியர், விதி மீறலில் ஈடுபட்ட திமுகவினரை கண்டித்தார்.
ஆனால் அவர்கள் வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்தச் சம்பவம்குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















