பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக நவம்பர் 6 ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 122 தொகுதிகளுக்கு நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 68.52 சதவீத வாக்குகள் பதிவானது. தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 243 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணும் பணி இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
















