ஆர்எஸ்எஸ் குறித்த ஊடகவியலாளர் ஷஷாந்த் மட்டூ கருத்துக்கு ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு, தனக்கான ஆதரவு நிலையை அமெரிக்காவில் உருவாக்க Squire Patton Boggs என்ற நிறுவனத்தை பணியமர்த்தியுள்ளதாக ஊடகவியலாளர் ஷஷாந்த் மட்டூ கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்காக 3 லட்சத்து 30 ஆயிரம் டாலர் ஆர்எஸ்எஸ் அமைப்பு செலவு செய்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஷஷாந்த் மட்டூவின் இந்த கருத்திற்கு ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பு அமெரிக்காவில் எந்த நிறுவனத்தையும் பணியமர்த்தவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
















