பீகார் சட்டப்பேரவை தேர்தலில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவானது.
இந்நிலையில், 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்படி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது.
இதில் ஆரம்பம் முதலே என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி என்டிஏ கூட்டணி 201 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
38 மாவட்டங்களில் மொத்தம் 46 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஈரடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படையினரும், வெளிஅடுக்கில் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
















