புதுக்கோட்டை அருகே தொழில்நுட்ப கோளாறால் சாலையில் தரையிறக்கப்பட்ட சிறிய ரக விமானம், மீட்பு வாகனம் மூலம் சேலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
காரைக்குடியிலிருந்து திருச்சியை நோக்கிச் சிறிய ரக பயிற்சி விமானம் நேற்று பறந்து கொண்டிருந்தது.
அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி அறிந்துள்ளார். இதனால் புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை, விமானி தரையிறக்கினார்.
இதையடுத்து சுமார் 14 மணி நேர போராட்டத்திற்கு பிறகு விமானத்தின் இறக்கைகள் உட்பட ஒவ்வொரு பாகமாக கழற்றப்பட்டு, மீட்பு வாகனம் மூலம் சேலம் விமான பயிற்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
















