பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளதை அடுத்து கன்னியாகுமரியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
முட்டைக்காடு சந்திப்பு பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாஜகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பாஜகவினர் இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
















