உக்ரைன் நாட்டு இளைஞர்கள் ஜெர்மனிக்கு வரவேண்டாம் என ஜெலென்ஸ்கியிடம் வலியுறுத்தியுள்ளதாகச் சேன்ஸலர் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் ரஷ்யா இடையே போர் தொடங்கியது. இதன் காரணமாகச் சுமார் ஒரு மில்லியன் உக்ரைன் அகதிகளை ஜெர்மனி ஏற்றுக்கொண்டது.
ஆனால், சமீபத்தில், 18 முதல் 22 வயது வரையுள்ள இளைஞர்கள் உக்ரைனை விட்டு வெளியேற ஜெலென்ஸ்கி உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து ஜெர்மனிக்கு வரும் உக்ரைன் இளைஞர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தான், உக்ரைன் இளைஞர்கள் எங்கள் நாட்டுக்கு வராமல் இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக ஜெர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளார்.
உக்ரைன் அகதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை இனி குறைக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
















