சூடானில் தொடரும் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை நரகமாகியுள்ளது.
விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள், தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடு சூடான்.
அத்தனை வளங்கள் இருந்தும் உள்நாட்டுப் போரால் இன அழிப்பு, பசி, பட்டினி, வன்முறை என்று அங்கு நிகழும் அவலங்கள் உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி கொண்ட நாடாக அதை மாற்றியுள்ளது.
ராணுவத்துக்கும், அந்நாட்டின் துணை ராணுவப் படைக்கும் இடையேயான அதிகார மோதல் சுமார் ஒன்றரை லட்சம் உயிர்களை பறித்துள்ளது.
கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். குறிப்பாகத் துணை ராணுவப் படை கடந்த மாதம் டார்ஃபூர் நகரை கைப்பற்றியது.
இருப்பினும் நாளுக்கு நாள் தொடரும் தாக்குதல் மற்றும் பெரும்பாலான இடத்தைக் கைப்பற்றும் நடவடிக்கையால் மக்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.
















