ஈரானுக்கு உதவியதாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசுத் தடை விதித்துள்ளது.
சீனாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக ஈரானுக்கு சோடியம் குளோரேட், சோடியம் பெர்குளோரேட், செபாசிக் ஆசிட் ஆகிய ரசாயனங்கள் சரக்குக் கப்பல்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்தியாவின் சண்டிகரை சேர்ந்த பார்ம்லேன் நிறுவனம் சார்பில் ஈரானின் ஏவுகணை திட்டங்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.
மேலும் துருக்கி, ஹாங்காங், ஜெர்மனி, உக்ரைன் நாடுகளை சேர்ந்த சில நிறுவனங்களும் ஈரானின் ஏவுகணை, ட்ரோன் தயாரிப்புக்குத் தேவையான பொருட்களை விநியோகம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் ட்ரோன் தயாரிப்புக்காகப் பல்வேறு நாடுகளில் இருந்து ரசாயனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் வாங்குவதை தவிர்க்க அமெரிக்கா புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் காரணமாக 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசுத் தடை விதித்திருக்கிறது.
















