சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை குறைந்து 93 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகிறது. அந்தவகையில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை சரிந்துள்ளது.
காலை நிலவரப்படி கிராமிற்கு 60 ரூபாய் குறைந்து 11 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், சரவனுக்கு 480 குறைந்து 94 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனையடுத்து வர்த்தகம் நிறைவுபெறும் நிலையில், மாலை நிலவரப்படி கிராமிற்கு 100 ரூபாய் குறைந்து 11 ஆயிரத்து 740 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 93 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை ஒரேநாளில் இருமுறை குறைந்தது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி கிராமிற்கு 3 ரூபாய் குறைந்து 180 ரூபாய்க்கும், கிலோவிற்கு மூன்றாயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்ட நிலையில், மாலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.
















