நல்லாட்சி வென்றுள்ளது எனவும், சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது என்றும் பீகார் சட்டமன்ற தேர்தலின் வெற்றியைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாற்று சிறப்புமிக்க மற்றும் இணையற்ற வெற்றியைப் பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்களால் கிடைக்கப்பட்ட இந்த ஆசீர்வாதம் பீகாருக்காக உழைக்க மேலும் பலமளிப்பதாகவும் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
















