பீகாரில் 2015ம் ஆண்டு 27 இடங்களிலும், 2020ல் 19 இடங்களிலும் வென்ற காங்கிரஸ், 2025 தேர்தலில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டும் வெற்றி பெற்று பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
பீகாரில் சட்டசபை தேர்தல் மாநில அளவில் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் அனைத்து அரசியல் கட்சிகள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்துக் களம் கண்ட எதிர்க்கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன.
பாரம்பரிய மிக்க அரசியல் கட்சியான காங்கிரஸ் பீகார் தேர்தலில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெற்றிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
















