மதுரையில் கிணற்றில் ரசாயன கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விமான நிலையம் அருகே பூந்தோட்டம் அன்பழகன் நகரில் உள்ள கிணற்று நீரை மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம், மர்ம நபர்கள் ரசாயன கழிவுகளை கிணற்றில் கொட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அத்துடன் கிணற்றை தூய்மைப்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
















