கடந்த 20 ஆண்டுகளில் காங்கிரஸ் 95 தோல்விகளை சந்தித்துள்ளதாகவும், தொடர் தோல்விக்கான விருதை அவரை தவிர வேறு யாரும் வெல்ல முடியாது எனவும் பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி வெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், பீகார் தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி சமூக வலைதளத்தில் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா வெளியிட்டுள்ள பதிவில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடர்ச்சியாக தேர்தல்களில் தோல்வியை தழுவி வருவதாகவும், தோல்விக்கான விருதுகள் இருந்தால் நிச்சயமாக அவற்றை அவர் அள்ளி செல்வார் எனவும் விமர்சித்துள்ளார்.
நட்சத்திர பேச்சாளராக ராகுல் காந்தி மாறியதில் இருந்து அக்கட்சி சந்தித்த 95 தேர்தல் தோல்விகள் தொடர்பான வரைபடத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்த விபரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
















