திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அறநிலையத்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து, திருப்பரங்குன்றம் பகுதியில் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற கோரி வேல் பூஜை செய்து வேல் மதுரை எடுத்துச் செல்லப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைப்பினர், இறை நம்பிக்கை இல்லாத ஒன்றாக இந்து சமய அறைநிலையத்துறை இருப்பதாக குற்றஞ்சாட்டினர்.
















