அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் மையத்தின் இயக்குநர், துணை இயக்குநர்கள் உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள தகவலில், 2023-24ஆம் ஆண்டு கால கட்டங்களில் தமிழகத்தில் உள்ள 480 கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 47 சதவீத பொறியியல் கல்லூரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகளை பின்பற்றாமல் லஞ்சம் பெற்றுக் கொண்டு அங்கீகாரம் வழங்கும் அண்ணா பல்கலைக் கழக மையத்தின் இயக்குநர்கள், துணை இயக்குனர்கள் உள்ளிட்டோர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஒரு கல்லூரியில் பயிற்றுவிக்கும் பேராசிரியர் ஒரே நேரத்தில் 11 கல்லூரிகளில் பணிபுரிந்தது போன்று போலி ஆவணம் சமர்ப்பித்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் மையத்தின் இயக்குனர் மற்றும் துணை இயக்குநர்கள் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
















