சமூக வலைதளங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தனிநபர் தரவுகளை பாதுகாக்க தவறினால், அவர்களுக்கு 250 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க நேரிடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் சமூக வலைதளங்கள், இ – காமர்ஸ் நிறுவனங்கள் உள்ளிட்டவை, 3 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் உள்ள கணக்குகளில், தனி நபர் தரவுகளை அழித்துவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் தனியார் நிறுவனங்கள் அவற்றை எவ்வளவு காலம் பராமரிக்கலாம், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன உள்ளிட்ட நிபந்தனைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விதிமுறைகள் அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் படிப்படியாக நடைமுறைக்கு வரவுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















