திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் அருகே சிமெண்ட் சாலை அமைக்கும் பணியின்போது வீட்டின் முன்பு உள்ள மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க உரிமையாளர் தடுத்து வருவதால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மஷார் ஊராட்சியில் உள்ள பல்வேறு தெருக்களில் தற்போது சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் யாதவர் தெருவில் வசித்து வரும் திமுக நிர்வாகி ஏழுமலை என்பவர், தனது வீட்டிற்கு வெளியே உள்ள மின் கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைத்துச் சிமெண்ட் சாலை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















